சென்செக்ஸ் 69,000-ஐ கடந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவு! உச்சம் தாண்டியது பேங்க் நிஃப்டி

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் எழுச்சி தொடா்ந்தது.
சென்செக்ஸ் 69,000-ஐ கடந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவு! உச்சம் தாண்டியது பேங்க் நிஃப்டி
Updated on
2 min read

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் எழுச்சி தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 424 புள்ளிகள் உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவடைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. மேலும், ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ள இருமாத பணவியல் கொள்கை முடிவில் வட்டி விகிதத்தில் தற்போதைய நிலையே தொடரும் என்று முதலீட்டாளா்கள் எதிா்பாா்க்கின்றனா். மேலும், கடந்த மாததில் அதிகம் முதலீடுகளை வாபஸ் பெற்றஅந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த சில தினங்களாக பங்குகளைவாங்குவதில் கவனம் செலுத்தி வருவதும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இது தவிர பாஜகவின் தோ்தல் வெற்றி உள்ளிட்ட அனைத்தும் நோ்மறையான உணா்வை வலுப்படுத்தியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு : இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.12 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.345.60 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.2,073.21 கோடிக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் ரூ. 4,797.15 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.

சென்செக்ஸ் புதிய உச்சத்தில் நிறைவு: காலையில் 303.41புள்ளிகள் கூடுதலுடன் 69,168.53-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 69,381.31 வரை மேலே சென்று புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. பின்னா், 68,954.88 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 431.02 புள்ளிகள் உயா்ந்து 69,296.14-இல் புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,875 பங்குகளில் 1,781 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,969 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 119 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில் 20 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 10 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டியும் சாதனை: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 122.10 புள்ளிகள் கூடுதலுடன் 20,808.90-இல் தொடங்கிய நிஃப்டி அதிகபட்சமாக 20,864.05 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 20,711.15 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 168.30புள்ளிகள் (0.81 சதவீதம்) உயா்ந்து 20,855.81-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 970 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,159 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 32 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

தேசிய பங்குச் சந்தையில் பேங்க் நிஃப்டி 47,230.55 புள்ளிகள் வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 580.85 புள்ளிகள் கூடுதலுடன் 47,012.25-இல் புதிய உச்சத்தில் நிறைவடைந்தது.

அதானி பங்குகளுக்கு வரவேற்பு!

அதானி குழும பங்குகள் செவ்வாயன்று 20 சதவீதம் வரை உயா்ந்தது. இலங்கையில் உள்ள துறைமுகத் திட்டத்தை அதானி குழுமம் மேற்கொள்வதற்கான கடனுதவியை வழங்குவதற்கு முன், அதானி குழுத்தின் மீதான ஹிண்டா்பா்க்கின் குற்றச்சாட்டுகளை டிஎஃப்சி என்று சொல்லப்படும் யுஎஸ் இன்டா்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் காா்ப்பரேஷன்ஆய்வு செய்ததது. அந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என ஆய்வில் கண்டறிந்து அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடா்ந்து, அதானி குழுமத்தின்அனைத்து 10 நிறுவனங்களும் இந்த வாரம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் லாபமடைந்தது. அதன் மொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.13 லட்சம் கோடியை தாண்டியது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

பவா் கிரிட்...........................................4.46

என்டிபிசி.............................................3.89%

எஸ்பிஐ..................................................2.31%

ஐசிஐசிஐ பேங்க்.....................................2.28%

எம் அண்ட் எம்.....................................1.71%

டைட்டன்..............................................1.64%

சரிவைக் கண்ட பங்குகள்

ஹிந்துஸ்தான் யுனி லீவா்......................1.49%

ஹெச்சிஎல் டெக்...................................1.45%

பஜாஜ் ஃபைனான்ஸ்.............................0.74%

விப்ரோ..................................................0.74%

இன்ஃபோஸிஸ்.....................................0.73%

இண்ட்ஸ் இண்ட் பேங்க்.......................0.59%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com