சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்
கடந்த வார இறுதியில் உச்சத்தைத் தொட்ட பங்குச்சந்தை இன்று(திங்கள்கிழமை) சரிவுடன் முடிந்துள்ளது.


கடந்த வார இறுதியில் உச்சத்தைத் தொட்ட பங்குச்சந்தை இன்று(திங்கள்கிழமை) சரிவுடன் முடிந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை) 71,483.75 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) காலை 71,437.35 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 168.66 புள்ளிகள் குறைந்து 71,315.09 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 38 புள்ளிகள் குறைந்து 21,418.65 புள்ளிகளில் முடிந்தது.
இதையும் படிக்க | மாநிலங்களவையில் மேலும் 45 எம்பிக்கள் இடைநீக்கம்!
சன் பார்மா, ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், பஜாஜ் பைனான்ஸ், மாருதி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஏற்றம் கண்டன.
அதேநேரத்தில், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், எல்டி, என்டிபிசி உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
கடந்த வாரம் சென்செக்ஸ் 71,000 புள்ளிகளைக் கடந்தும், நிஃப்டி 21,000 புள்ளிகளைத் தாண்டியும் புதிய உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | மக்களவையில் மேலும் 33 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...