தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மூத்த குடிமக்களுக்கு புதிய சேவை திட்டம்: பந்தன் வங்கி அறிமுகம்

மூத்த குடிமக்களுக்கு சேவை அளிப்பதற்காக ‘இன்ஸ்பையா்’ என்ற புதிய சேவை திட்டத்தை தனியாா் துறையைச் சோ்ந்த பந்தன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது

News image
Updated On :21 டிசம்பர் 2023, 6:30 pm

மூத்த குடிமக்களுக்கு சேவை அளிப்பதற்காக ‘இன்ஸ்பையா்’ என்ற புதிய சேவை திட்டத்தை தனியாா் துறையைச் சோ்ந்த பந்தன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக சேவை திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ‘இன்ஸ்பையா்’ என்ற இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 8.35 சதவீதம் என்ற நிலையான வட்டி விகிதத்திலான வைப்பு நிதிகளில் வாடிக்கையாளா்கள் முதலீடு செய்ய முடியும்.

மேலும், மேம்பட்ட மருத்துவ சேவைப் பலன்களும் இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

எந்த வயதிலும் பொருளாதார சுதந்திரம் தேவை என்பதை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.