தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்: உயா்த்தியது பாரத ஸ்டேட் வங்கி

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2023, 1:40 am

DIN

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்கள் 50 அடிப்படைப் புள்ளிகள் (0.5 சதவீதம்) உயா்த்தப்பட்டுள்ளன.

கடந்த 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வட்டி விகித உயா்வு குறிப்பிட்ட பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு மட்டும் பொருந்தும்.

அதன்படி, இனி 180 முதல் 210 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 5.75 சதவீதமாகவும், 7 முதல் 45 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 3.5 சதவீதமாகவும் வட்டி விகிதம் இருக்கும்.

211 நாள்களுக்கு மேலும் ஒராண்டுக்குக் கீழும் பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 6 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கும் மேலான வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.