அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

பட்ஜெட் எதிரொலி... சென்செக்ஸ் உயர்வு; நிஃப்டி சரிவு

நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்துள்ளன. 

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2023, 12:32 pm

DIN

நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்துள்ளன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 158.18   புள்ளிகள் உயர்ந்து 59,708.08 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.27 சதவிகிதம் உயர்வாகும்.

 இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45.85 புள்ளிகள் சரிந்து 17,616.30 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.26 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 16 நிறுவங்களின் பங்குகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஏனைய 14 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டது. 

அதிகபட்சமாக ஐடிசி பங்குகள் 2.61 சதவிகிதம், டாடா ஸ்டீல் 2.01 சதவிகிதம், ஐசிஐசிஐ வங்கி 1.80 சதவிகிதம், டிசிஎஸ் 1.50 சதவிகிதம், எச்டிஎஃப்சி வங்கி 1.47 சதவிகிதம் உயர்ந்துள்ளன.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.