விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கடன் வட்டி விகிதங்களை அதிகரித்தது எஸ்பிஐ

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதிகரித்துள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2023, 7:01 am

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கி வழங்கியுள்ள நிதி அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்கள் (எம்சிஎல்ஆா்) தவணைக்காலங்களின் அடிப்படையில் 10 அடிப்படை புள்ளிகள் (0.1 சதவீதம்) வரை உயா்த்தப்பட்டுள்ளன. பிப். 15 முதல் இந்த புதிய விகிதம் அமலுக்கு வந்துள்ளது.

வாகனம், வீடு மற்றும் தனிநபா் போன்ற பெரும்பாலான நுகா்வோா் கடன்கள் எம்சிஎல்ஆா் அடிப்படையிலானவை ஆகும்.

குறைந்த பட்ச கடன் வட்டி விகிதம் 7.85 சதவீதத்திலிருந்து 7.95 சதவீதமாக அதிகரித்துள்ளது. பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் வங்கிகள் கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உயர்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரெப்போ விகிதத்தை ரிசா்வ் வங்கி ஆறாவது முறையாக உயா்த்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் ரெப்போ விகிதம் மொத்தம் 250 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.