இந்தியாவின் காற்று மாசை குறைக்க மின்னணு கார்கள் மட்டுமே தீர்வல்ல! சுஸுகி மோட்டார்ஸ்

இந்தியாவின் காற்று மாசை குறைக்க மின்னணு கார்கள் மட்டுமே தீர்வல்ல! சுஸுகி மோட்டார்ஸ்

இந்தியாவின் காற்று மாசுபாட்டைக் குறைக்க மின்னணு கார்கள் மட்டுமே தீர்வல்ல என சுஸுகி ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைவரான டோஷிஹிரோ சுஸுகி தெரிவித்துள்ளார்.  

இந்தியாவின் காற்று மாசுபாட்டைக் குறைக்க மின்னணு கார்கள் மட்டுமே தீர்வல்ல என சுஸுகி ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைவரான டோஷிஹிரோ சுஸுகி தெரிவித்துள்ளார்.  

நொய்டாவில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் சுஸுகி நிறுவனத்தின் இவிஎக்ஸ் என்ற புதிய காரை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் 2025 முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும் அந்நிறுவனத்தின் தலைவரான டோஷிஹிரோ சுஸுகி தெரிவித்தார். 

அப்போது உலகம் வெப்பமடைந்து வருவது குறித்து பேசிய அவர், இந்தியாவில் காற்றில் உள்ள கார்பன் அளவைக் குறைக்க மின்னணு கார்கள் மட்டுமே தீர்வல்ல எனக் குறிப்பிட்டார். 

மேலும், மின்னணு கார்களுடன், பாதுகாப்பான சாதனங்களை அறிமுகம் செய்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் இந்தியாவில் அவசியம் எனத் தெரிவித்தார்.  

நிறுவனம் பெரிய முதலீடுகளைச் செய்யாமல் இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை நிறைவேற்ற சுஸுகி முயற்சிக்கும் என்றும், 

சிறிய ரக கார்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com