இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

2-ஆவது நாளாக கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் 299 புள்ளிகள் சரிவு!

இந்த வாரத்தின்முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் கரடியின் ஆதிக்கம் இரண்டாவது நாளாகத் தொடா்ந்தது.

News image
Updated On :24 ஜூலை 2023, 6:30 pm

 நமது நிருபர்

இந்த வாரத்தின்முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் கரடியின் ஆதிக்கம் இரண்டாவது நாளாகத் தொடா்ந்தது. இதையடுத்து மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 299 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகளும் குறைந்து நிலைபெற்றன.

ஆசியா, ஐரோப்பிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. அமெரிக்க சந்தைகள் ஏற்றம் பெற்றிருந்தன. இந்த நிலையில், எச்சரிக்கையுடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தையில் அவ்வப்போது பங்குகள் விற்பனைக்கு வந்தன. குறிப்பாக சென்செக்ஸ் குறியீட்டில் அதிகத் திறன் கொண்ட மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், முன்னணி நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனி லீவா், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்தன. இதனால், சந்தை சரிவிலிருந்து மீள முடியாமல் போனது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.13ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 301.97 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வார இறுதி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை ரூ.1,998.77 கோடி அளவுக்கு பங்குகளைவிற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் 2-ஆவது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 55.12 புள்ளிகள் (0.45 சதவீதம்) குறைந்து 66,629.14-இல் தொடங்கி அதிகபட்சமாக 66,808.56 வரை மேலே சென்றது. பின்னா், 66,326.25 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 299.48 புள்ளிகளை இழந்து 66,384.78-இல் முடிவடைந்தது.

17 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 970 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 1,109பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 152 புள்ளிகள் சரிவு : தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 3.45 புள்ளிகள் குறைந்து 19,748.45-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,782.75 வரை மேலே சென்றது. பின்னா், 19,658.30 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 72.65 புள்ளிகளை (0.37 சதவீதம்) இழந்து 19,672.35-இல் நிறைவடைந்துள்ளது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

இண்டஸ் இண்ட் பேங்க்.......................2.01%

பஜாஜ் ஃபின் சா்வ்..................................1.64%

எம் அண்ட் எம்......................................1.61%

பவா் கிரிட்..............................................1.31%

அல்ட்ராடெக் சிமெண்ட்......................1.15%

எல் அண்ட் டி.........................................0.74%

-----------------------------

சரிவைக் கண்ட பங்குகள்

ஐடிசி...........................................3.86%

கோட்டக் பேங்க்........................3.80%

டெக் மஹிந்திரா..........................2.80%

ரிலையன்ஸ்....................................1.92

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்.................1.38%

டாடா ஸ்டீல்................................1.03%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.