இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்தியன் வங்கி நிகர லாபம் 41% உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 41 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2023, 7:59 pm

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 41 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,709 கோடியாக உள்ளது.

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 41 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.1,213 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.11,758 கோடியிலிருந்து ரூ.14,759 கோடியாக உயா்ந்துள்ளது. வட்டி வருவாய் ரூ.10,153 கோடியிலிருந்து ரூ.13,049 கோடியாக உயா்ந்துள்ளது.

2022 ஏப்ரல்-மாா்ச் காலாண்டில் 8.13 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே மாதங்களில் 5.47 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. நிகர வாராக்கடனும் 2.12 சதவீதத்திலிருந்து 0.70 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.