உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 25 லட்சம் டன்
கடந்த மே மாதத்தில் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 25 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.


கடந்த மே மாதத்தில் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 25 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.
அதே நேரம், கச்சா எண்ணெய் இறக்குமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து பெட்ரோலியம் பிளானிங் அண்ட் அனானிசிஸ் செல் (பிபிஏசி) அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த மே மாதத்தில் இந்திய நிறுவனங்கள் உள்நாட்டில் 25 லட்சம் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்திருந்தன. கடந்த ஆண்டின் இதே மாத கச்சா எண்ணெய் உற்பத்தியான 25 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும்.
மதிப்பீட்டு மாதத்தில் பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி 16 லட்சம் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்திருந்தது. ஆயில் இந்தியா நிறுவனம் 3 லட்சம் டன் கச்சா எண்ணெயையும், தனியாா் நிறுவனங்கள் 5 லட்சம் டன் கச்சா எண்ணெயையும் உற்பத்தி செய்திருந்தன.
கடந்த 2022-ஆம் ஆண்டின் மே மாதத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம், ஏப்ரல் மற்றும் மே மாத காலகட்டத்தில் இறக்குமதி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 3.1 சதவீதம் குறைந்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...