பங்குச்சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 446 புள்ளிகள் உயர்வு

கடந்த மூன்று தினங்களாக சரிவில் இருந்து வந்த பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை காளையின் எழுச்சி காணப்பட்டது. 
பங்குச்சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 446 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

கடந்த மூன்று தினங்களாக சரிவில் இருந்து வந்த பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை காளையின் எழுச்சி காணப்பட்டது.
 இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 446 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 126 புள்ளிகளும் உயர்ந்து நிலைபெற்றன.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதனால், உள்நாட்டுச் சந்தை தயக்கத்துடன் தொடங்கியது. இருப்பினும், வங்கி, நிதி நிறுவனங்கள், ரியால்ட்டி, ஐடி, மெட்டல் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது.
 அதே சமயம், ஆயில் அண்ட் காஸ், எஃப்எம்சிஜி பங்குகள் சுணக்கம் கண்டன. இரட்டை நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகிய இரண்டும் ஜூலை ஒன்று முதல் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இதனால், அந்தப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.46 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக நேர முடிவில் ரூ.292.13 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.409.43 கோடி அளவுக்கு
 பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 181.85 புள்ளிகள் கூடுதலுடன் 63,151.85-இல் தொடங்கி 63,054.84 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 63,467.54 வரை மேலே சென்செக்ஸ், இறுதியில் 446.03 புள்ளிகள் உயர்ந்து 63,416.03-இல் முடிவடைந்தது.
 27 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 27 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 3 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 34 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
 ஏற்றம் பெற்ற பங்குகள்
 எஸ்பிஐ 1.59%
 ஹெச்டிஎஃப்சி 1.59%
 ஆக்ஸிஸ் வங்கி 1.42%
 ஹெச்டிஎஃப்சி வங்கி 1.38%
 பார்தி ஏர்டெல் 1.37%
 கோட்டக் வங்கி 1.17%
 சரிவைக் கண்ட பங்குகள்
 மாருதி 0.28%
 ஐடிசி 0.04%
 ஹிந்துஸ்தான் யுனிலீவர் 0.03%
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com