புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பங்குச்சந்தைகள் ஏற்றம்: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தைகள் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

News image
Updated On :27 ஜூன் 2023, 6:32 am

DIN

பங்குச்சந்தைகள் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

நேற்று(திங்கள்கிழமை) 62,970 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

காலை 11.55 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 161.28 புள்ளிகள் அதிகரித்து 63,131.28 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 53.85 புள்ளிகள் உயர்ந்து 18,745.05 புள்ளிகளில் இருந்து வருகிறது.

டாடா ஸ்டீல், டாடா மோட்டார், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. 

அதேநேரத்தில் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்சிஎல் டெக், ஹிந்துஸ்தான் லீவர், இண்டஸ்இண்ட் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை இறக்கம் கண்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.