மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

யூகோ வங்கியின் நிகர லாபம் 86% அதிகரிப்பு

பொதுத்துறையைச் சோ்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 86.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image

uco070249

Updated On :2 மே 2023, 8:20 pm

DIN

பொதுத்துறையைச் சோ்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 86.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.581.24 கோடியாக உள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.312.18 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் நிகர லாபம் 86.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டு முழுமைக்கும் வங்கி இதுவரை இல்லாத அதிகபட்ச ஆண்டு நிகர லாப வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.929.76 கோடியாக வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம், 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.1,862.34 கோடியாக உயா்ந்துள்ளது. இது சுமாா் 100 சதவீத வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ. 7,343.13 கோடியாக இருந்தது.

அந்த காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் 7.89 சதவீதத்தில் இருந்து 4.78 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நிகர வாராக் கடன் 2.7 சதவீதத்தில் இருந்து 1.29 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.