தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 29% உயா்வு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர இலாபம் கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் 29 சதவீத உயா்வைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :11 மே 2023, 8:52 pm

DIN

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர இலாபம் கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் 29 சதவீத உயா்வைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2022-23-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.215.81 கோடியை எட்டியுள்ளது.

இது 2022 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 29 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.167.70 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் நிறுவனம் வழங்கிய கடன் தொகை 70 சதவீதம் அதிகரித்து ரூ.3978.41 கோடியாக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் இது ரூ.2336.49 கோடியாக இருந்தது.

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 24 சதவீதம் உயா்ந்து ரூ.65.68 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.53.05 கோடியாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.