அந்நிய முதலீடு தொடர் வெளியேற்றம்: 143 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்

பங்குச்சந்தை வியாழக்கிழமை எதிர்மறையாக முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 143 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. 
பங்குச்சந்தை
பங்குச்சந்தை
Updated on
1 min read

பங்குச்சந்தை வியாழக்கிழமை எதிர்மறையாக முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 143 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது.
ஆசியா, ஐரோப்பா உள்பட உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. மேலும், அந்நிய  நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது உள்நாட்டுச் சந்தையில் முதலீட்டாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  உள்நாட்டுச் சந்தை  உற்சாகத்துடன் தொடங்கினாலும் அதன் பிறகு எதிர்மறையாகச் சென்றது. ஆட்டோ, ரியால்ட்டி,  தனியார் வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தாலும், எஃப்எம்சிஜி, ஐடி, மெட்டல், பொதுத்துறை வங்கிப் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன.  இதனால், சந்தை எதிர்மறையாக முடிவடைந்தது  என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.0.78 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.319.72 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்  புதன்கிழமை ரூ.84.55  கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை  வாபஸ் பெற்றுள்ளனர்.
சென்செக்ஸ் சரிவு: காலையில் 49.71 புள்ளிகள் கூடுதலுடன் 65,025.32-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 65,046.00 வரை மேலே சென்றது.  பின்னர், 64,768.76  வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 143.41 புள்ளிகள் (0.22 சதவீதம்)  குறைந்து  64,832.20-இல்  முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,827 பங்குகளில் 1,655 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,050 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 122 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில்  13 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 
நிஃப்டி 48 புள்ளிகள் வீழ்ச்சி:
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 13.90 புள்ளிகள் கூடுதலுடன் 19,457.40- இல் தொடங்கி அதிகபட்சமாக 19,463.90 வரை மேலே சென்றது. 
பின்னர், 19,378.35 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 48.20 புள்ளிகள் (0.25 சதவீதம்)  குறைந்து 19,395.30 இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில்  821 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,279 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.   நிஃப்டி பட்டியலில் 22 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 28 பங்குகள் வீழ்ச்சிப்  பட்டியலிலும் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com