கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தங்கம் விலை ரூ.50 உயர்வு; வெள்ளி விலை ரூ.400 குறைந்தது வர்த்தகமானது!

சர்வதேச அளவில் விலையுயர்ந்த உலோகங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.57,400 ஆக வர்த்தகமானது.

News image

தங்கம்

Updated On :6 அக்டோபர் 2023, 11:37 am

DIN

புதுதில்லி: சர்வதேச அளவில் விலையுயர்ந்த உலோகங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.57,400 ஆக வர்த்தகமானது.

முந்தைய வர்த்தகத்தில் தங்கம் 10 கிராமுக்கு ரூ.57,350 ஆக உள்ள நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,900-க்கு விற்பனையானது.

அமெரிக்க டாலரின் பின்னடைவு மற்றும் 10 வருட கருவூல வருவாய்க்கு மத்தியில் தங்கத்தின் விலை சமீபத்திய சரிவிலிருந்து மீண்டுள்ளது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் கமாடிட்டிஸின் மூத்த ஆய்வாளர் சவுமில் காந்தி தெரிவித்தார்.

வெளிநாட்டு சந்தைகளில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,822 டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 20.95 டாலராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.