மீண்டும் 66 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!
பங்குச்சந்தை வியாழக்கிழமை காலையில் தடுமாற்றம் கண்டாலும், பிற்பகலில் எழுச்சி பெற்று 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ்

கோப்புப்படம்

கோப்புப்படம்
பங்குச்சந்தை வியாழக்கிழமை காலையில் தடுமாற்றம் கண்டாலும், பிற்பகலில் எழுச்சி பெற்று 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மீண்டும் 66,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கத்தால், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று கீழே சென்றது. பின்னா், ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக இருந்ததைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சந்தையும் வலுபெறத் தொடங்கியது. குறிப்பாக, குறியீட்டுப் பட்டியலில்அதிகத் திறன் கொண்ட ஹெச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி பங்குகளுக்கு கிடைத்து வரவேற்பு சந்தை வலுப்பெற உதவியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.46 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.319.10 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ. 3,245.86 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் எழுச்சி: காலையில் 26.27 புள்ளிகள் குறைந்து 65,854.25-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,672.34 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகலில் அதிகபட்சமாக 66,296.90 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 385.04 புள்ளிகள் (0.58 சதவீதம்) கூடுதலுடன் 65266.56-இல் முடிவடைந்தது.
19 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 19 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,211 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 838 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 34 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 116 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பட்டியலில் இருந்து ஜியோ பைனான்ஸ் நீக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து மீண்டும் 50 முதல்தரப் பங்குகள்தான் இடம் பெற்றுள்ளது. நிஃப்டி காலையில் 12.40 புள்ளிகள் குறைந்து 19,598.65-இல் தொடங்கி, 19, 550.05 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,737.00 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 116 புள்ளிகள் (0.59 சதவீதம்) கூடுதலுடன் 19,727.05-இல் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
எல் அண்ட் டி.............................................4.26%
இண்டஸ் இண்ட் பேங்க்............................2.26%
டெக் மஹிந்திரா...........................................1.69%
எஸ்பிஐ..........................................................1.55%
ஹெச்சிஎல் டெக்..........................................1.49%
ஆக்ஸிஸ் பேங்க்............................................1.33%
சரிவைக் கண்ட பங்குகள்
சன்பாா்மா....................................................0.80%
எம் அண்ட் எம்............................................0.74%
இன்ஃபோஸிஸ்............................................0.73%
ஹிந்துஸ்தான் யுனி லீவா்.............................0.60%
அல்ட்ரா டெக் சிமெண்ட்.............................0.49%
பாா்தி ஏா்டெல்...............................................0.46%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...