இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை காலையில் சரிந்த பங்குச்சந்தை பிற்பகலில் மீண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 173 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
எச்சரிக்கையுடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை, முதல் பாதியில் சரிவைச் சந்தித்தது. பின்னர், ஆசியா, ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகறயாக இருந்தததைத் தொடர்ந்து சந்தை மீட்சி பெற்றது. குறிப்பாக சென்செக்ஸில் அதிகக் திறன் கொண்ட மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், எல் அண்ட் டி, ஐடிசி உள்ளிட்ட முன்னணி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை வலுப்பெற்றது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.45 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக நேர முடிவில் ரூ.319.61 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்
கிழமை ரூ. 693.47 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 19.83புள்ளிகள் குறைந்து 65,925.64-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,549.96 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 66,172.27 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 173.22 புள்ளிகள் (0.26 சதவீதம்) உயர்ந்து 66,118.69-இல் முடிவடைந்தது.
20 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 20 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,142 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 897 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி 52 புள்ளிகள் முன்னேற்றம் : தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 27.65 புள்ளிகள் குறைந்து 19,637.05-இல் தொடங்கி 19,554.00 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 19,730.70 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 51.75 புள்ளிகள் உயர்ந்து 19,716.45-இல் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமூக மாற்றத்துக்கான உன்னத பணி - ராமதாஸ்

புதுகையில் ரூ. 15 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட நீதிமன்ற வளாகம் இன்று திறப்பு

மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

