கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :17 ஆகஸ்ட் 2023, 10:57 am

DIN

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது. 

நேற்று (புதன்கிழமை) 65,539.42 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(வியாழக்கிழமை) காலை 65,503.85 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், 388.40 புள்ளிகள் குறைந்து 65,151.02 என்ற புள்ளிகளில் நிறைவு பெற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 99.75 புள்ளிகள் குறைந்து 19,365.25 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.

டைட்டன், பஜாஜ் பின்செர்வ், ஆக்சிஸ் பேங்க், சன் பார்மா, டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. 

ஏசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ, எம் & எம், ஐசிஐசிஐ வங்கி, மாருதி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் பின்னடைவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.