குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன?
By DIN | Published On : 17th August 2023 03:49 PM | Last Updated : 17th August 2023 03:49 PM | அ+அ அ- |

வயிற்றில் கரு உருவாகும்போதே மூளையின் செல்கள் மிகவும் வேகமாக வியக்கத்தக்க அளவில் வளர்ச்சி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுபோல குழந்தை பருவத்தில் குறிப்பாக 1 முதல் 3 வயது வரையும் குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அவசியம்.
பருவ வயதை அடையும்வரை குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை சரியான அளவில் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
யுனிசெஃப் கூற்றுப்படி, 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளில் 3ல் இருவருக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காததால் அவர்களின் மூளை மற்றும் உடல் உறுப்புக்களின் வளர்ச்சி மோசமாகவுள்ளது என்றும் இதனால் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி குழந்தை இறப்பு ஏற்படுவதாகக் கூறியுள்ளது.
இதையும் படிக்க | டீயுடன் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடலாமா? எதையெல்லாம் சாப்பிடக் கூடாது?
குழந்தையின் வளர்ச்சி குறிப்பாக நினைவுத்திறனை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன?
♦ பெர்ரி வகைகள் குறிப்பாக ப்ளுபெரி
♦ சாலமன் மீன்
♦ முட்டை
♦ வால்நட்ஸ், பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை
♦ கீரைகள்
♦ புரோக்கோலி
♦ மஞ்சள்
♦ டார்க் சாக்லேட்
♦ அவோகேடா
♦ ஓட்ஸ்
♦ ஆரஞ்சு
♦ கெட்டித் தயிர்
♦ க்ரீன் டீ
♦ பீன்ஸ்
♦ பூசணி விதைகள்
குழந்தைகளுக்கு இந்த உணவுகளை தனியாகவோ அல்லது வேறு ஏதேனும் உணவில் சேர்த்தோ கொடுக்கலாம். புரதம் மற்றும் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
இதையும் படிக்க | கண் இமைகளின் முடி உதிர்கிறதா? அடர்த்தியாக வளர டிப்ஸ் இதோ!!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...