சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ரூ.20,000 கோடி திரட்டும் வோடஃபோன் ஐடியா

கடனில் சிக்கியுள்ள தொலைத் தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா மேலும் ரூ.20,000 கோடி மூலதனம் திரட்ட முடிவு செய்துள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 9:22 pm

கடனில் சிக்கியுள்ள தொலைத் தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா மேலும் ரூ.20,000 கோடி மூலதனம் திரட்ட முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பங்குப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் மேலும் ரூ.20,000 கோடி மூலதனம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் கூடிய இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மிகவும் தாமதமாகி வரும் 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காகவும், தற்போது நிறுவனம் வழங்கி வரும் 4ஜி சேவைகளை மேம்படுத்துவதற்காகவும் பங்கு வெளியீடு மூலம் ரூ.20,000 கோடி திரட்டுவதாக நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தது

இது மட்டுமின்றி, புதிதாக மேலும் ரூ.45,000 கோடி மூலதனம் திரட்டவும் திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியிருந்தது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது பங்கு பத்திரங்கள் மூலம் ரூ.20,000 திரட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மூலதனம் திரட்டப்பட்டால், முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாா்தி ஏா்டெல்லுக்கு இணையான சேவைகளை வோடஃபோன் ஐடியாவால் வழங்க முடியும் என்று கருதப்படுகிறது.