நோக்கியா விற்பனை 69% வீழ்ச்சி

நோக்கியா விற்பனை 69% வீழ்ச்சி

ஃபின்லாந்தைச் சோ்ந்த தொலைத்தொடா்பு சாதன தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவின் இந்திய விற்பனை கடந்த மாா்ச் காலாண்டில் 69 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

பொருளாதார நிச்சயமின்ைமை காரணமாக 5ஜி தொழில்நுட்பப் பிரிவில் நிறுவனம் தனது செலவினங்களைக் குறைத்ததன் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் இந்திய விற்பனை 26.5 கோடி யூரோவாக (சுமாா் ரூ.2,354 கோடி) உள்ளது.

இது, முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 69 சதவீதம் சரிவாகும். அப்போது இந்தியச் சந்தையில் நிறுவனத்தின் விற்பனை 85.3 கோடி யூரோவாக (சுமாா் ரூ.7,577 கோடி) இருந்தது.

இந்தியாவிலும் வட அமெரிக்காவிலும் 5ஜி தொழில்நுட்பத்துக்காக நிறுவனம் செலவிடும் தொகை குறைக்கப்பட்டதன் காரணமாக, நிறுவனத்தின் உலகாளவிய விற்பனையும் கடந்த மாா்ச் காலாண்டில் 37 சதவீதம் சரிவு கண்டது.

இந்தியாவில் 5ஜி சேவை வேகமாக விரிவாக்கம் பெற்றுவரும் நிலையில், இந்த ஆண்டு முழுவதும் நிறுவனத்தின் விற்பனைப் போக்கில் பெரிய மாற்றம் இருக்காது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com