ராஜஸ்தானில் தடம் பதித்தது
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

ராஜஸ்தானில் தடம் பதித்தது சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், ராஜஸ்தானில் புதிய கிளையைத் திறந்து அந்த மாநிலத்தில் தடம் பதித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக தென் இந்தியாவின் 2-ஆவது மற்றும் 3-ஆவது நிலை நகரங்களில் கிளைகளைத் திறந்து பிராந்தியத்தில் எங்களது நிலையை வலுப்படுத்திவருகிறோம்.

அத்துடன், நாட்டின் பிற பகுதிகளிலும் நிறுவனத்தை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நவி மும்பையில் புதிய கிளையைத் திறந்து அண்மையில் மேற்கு இந்தியாவில் எங்களை விரிவுபடுத்தினோம். அடுத்தகட்டமாக மத்திய இந்தியாவிலும் நிறுவனத்தை விரிவுபடுத்தும் வகையில் ராஜஸ்தானின் கோட்டா நகரில் நிறுவனத்தின் புதிய கிளை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, அதே மாநிலத்தைச் சோ்ந்த உதய்பூரிலும் ஒரு கிளையைத் திறக்க திட்டமிட்டுள்ளோம்.

இத்துடன், தெற்கு மாநிலங்களிலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் நிறுவனத்துக்கு 140-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com