வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

உலகம் முழுவதும் பங்குச் சந்தையில் வீழ்ச்சி!

கடந்த ஆண்டு உச்சத்தைத் தொட்ட உலகின் மிகமுக்கிய பங்குச்சந்தைகள் கூட சரிந்தன.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2024, 12:12 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், உலக அளவில் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகள் இன்று (ஆக. 5) வீழ்ச்சி அடைந்தன.

கரோனா காலகட்டத்துக்கு பிறகு படிப்படியாக உயர்ந்து, கடந்த ஆண்டு உச்சத்தைத் தொட்ட, உலகின் மிகமுக்கிய பங்குச்சந்தைகள் கூட, தற்போது சரியத் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் வேலையின்மை விகிதம் 4.3% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதம் 4.1% ஆக இருந்தது.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம், முதலீட்டாளர்களிடையே நிலவுவதால், உலகளாவிய சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

மேலும், அமெரிக்காவின் பொருளாதாரம் அடுத்த 12 மாதத்தில் 15 முதல் 25 சதவீதம் வரை சரிய வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பிரபலமான முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாக்ஸ் அறிவித்துள்ளது.

இதனால், இந்தியா மட்டுமின்றி ஆசியாவின் ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளிலும், ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளன.

குறிப்பாக ஜப்பான் நிக்கேயி பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. 4,451.28 புள்ளிகள், அதாவது 12.4% சரிவை சந்தித்துள்ளது.

ஒரே நாளில் ஜப்பான் பங்குச்சந்தை அடைந்த மிகப்பெரிய சரிவு இது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 1987 அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு என இதனை அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த சில வாரங்களாக ஜப்பானிய பங்குகளில் உள்ள நிலைகளை விற்கத் தொடங்கியுள்ளனர்.

டோக்கியோ பங்குச்சந்தை குறியீடு அளித்த தரவுகளின்படி, ஜூலை இறுதி வாரத்தில் வாங்கிய பங்குகளை விட, கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் அதிக பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.

இதேபோன்று ஐரோப்பிய பங்குச்சந்தையும் 2% வரை சரிவை சந்தித்தன.

அமெரிக்காவின் மிகமுக்கிய பங்குச்சந்தை குறியீடான நாஸ்டாக் காம்போசைட் (Nasdaq Composite) பங்குகள் 4% சரிந்து, அதாவது 417.98 புள்ளிகள் சரிந்து 16,776.16 புள்ளிகளுடன் நிலைப்பெற்றது. மற்றொரு முக்கிய பங்குச்சந்தை குறியீடான எஸ்&பி 500, 2% சரிந்து, அதாவது 100.12 புள்ளிகள் சரிந்து 5,346.56 புள்ளிகளுடன் நிலைப்பெற்றது.

அமெரிக்காவில் உள்ள மத்திய வங்கியின் ஃபெடரல் ரிவர்ஸ் சிஸ்டம் படி, அடுத்த மூன்று அமர்வு ஆலோசனைக்குப் பிறகு வட்டி விகிதங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் (4.25% முதல் 4.5% ) என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கொரியாவின் பங்குச்சந்தை குறியீடான கோஸ்பி குறியீட்டு எண் 10%க்கும் மேல் குறைந்தது. தைவான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஹாங் காங் உள்ளிட்ட பங்குசந்தைகளும் கடும் சரிவை சந்தித்தன.

இந்த ஆண்டில் ஆசியாவில் சிறப்பாகச் செயல்படும் சந்தைகளில் ஒன்றாக உள்ள இந்திய பங்குச்சந்தையும், 2 சதவீதம் குறைவாக வர்த்தகம் ஆனது. சென்செக்ஸ் 3% வரையும், நிஃப்டி 2.68% வரையும் சரிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.