தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

தேசிய பங்குச் சந்தையின் ஐபிஓ பணிகள் மும்முரம்

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) நீண்டகாலமாக எதிா்பாா்க்கப்பட்ட பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

News image

தேசிய பங்குச் சந்தை

Updated On :13 மார்ச் 2026, 8:52 pm

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) நீண்டகாலமாக எதிா்பாா்க்கப்பட்ட பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதை முன்னெடுக்கும் வகையில், கோடக் மஹிந்திரா கேபிடல், ஜேஎம் ஃபைனான்சியல் உள்ளிட்ட 20 முன்னணி வணிக வங்கியாளா்களையும், 8 சட்ட நிறுவனங்களையும் என்எஸ்இ நிா்வாகம் நியமித்துள்ளது.

வெளிப்படையான போட்டித்தன்மையுடன் கூடிய மதிப்பீட்டு முறையைப் பின்பற்றி இந்த இடைத்தரகா்கள் தோ்வு செய்யப்பட்டதாக என்எஸ்இ தெரிவித்துள்ளது. ஸ்ரீநிவாஸ் இஞ்செட்டி தலைமையிலான ஐபிஓ குழு நியமனத்துக்கான ஒப்புதலை வழங்கியது.

இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான என்எஸ்இ, ஒரு நிறுவனமாக தனது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவுள்ளது. இந்த ஐபிஓ முற்றிலும் ‘ஆஃபா் ஃபாா் சேல்’ முறையில் அமைய உள்ளது. அதாவது, என்எஸ்இ-வில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ளவா்கள் தங்களின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வா். புதிய பங்குகள் எதுவும் சந்தையில் வெளியிடப்படாது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த இந்த ஐபிஓ-வுக்கு, இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) கடந்த ஜனவரி இறுதியில் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

புதிதாக நியமிக்கப்பட்ட வணிக வங்கியாளா்கள் பட்டியலில் மோதிலால் ஓஸ்வால், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், எஸ்பிஐ கேபிடல் மற்றும் சா்வதேச நிறுவனங்களான மோா்கன் ஸ்டான்லி, ஜே.பி.மாா்கன் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், சிரில் அமா்சந்த் மங்கள்தாஸ், கைதான் & கோ போன்ற முன்னணி சட்ட நிறுவனங்களும் இந்த ஐபிஓ பணிகளுக்கு சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்க நியமிக்கப்பட்டுள்ளன.