
வாரத்தின் இரண்டாவது வணிக நாளான இன்று (ஆக. 6) பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் உயர்ந்திருந்த நிலையில், வணிக நேர முடிவில், சரிந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 166.33 புள்ளிகள் சரிந்து 78,593.07 புள்ளிகளாக வணிகம் நிலைப்பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.21% சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 63.05 புள்ளிகள் வரை சரிந்து 23,992.55 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது. இது 0.26% சரிவாகும்.
நேற்றைய பங்குச்சந்தை வணிகத்தில் 3% வரை இருந்த சரிவுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் மோசமில்லை என்றாலும், சென்செக்ஸ் பட்டியலில் 18 நிறுவனத்தின் பம்ங்குகள் சரிவுடனே இருந்தன.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள 30 தரப் பங்குகளில் 12 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 18 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக மாருது சுசூகி, சன் பார்மா, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், டைட்டன் கம்பெனி, எம்&எம், இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எல்&டி, டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ், எச்.யு.எல்., ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்துடன் இருந்தன.
நேற்றைய வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 78,759.40 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இன்று வணிக நேரத் தொடக்கத்தில் சற்று உயர்வுடன் 78,981.97 புள்ளிகளாகத் தொடங்கியது.
இந்நாளின் அதிகபட்சமாக 79,852.08 என்ற உச்சத்தை எட்டியது. எனினும் வணிக நேர முடிவில் 250 புள்ளிகள் வரை சரிந்து 78,593 புள்ளிகளாக நிறைவு பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.