ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

13 சதவீதம் அதிகரித்த சீன இறக்குமதி

சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி கடந்த ஜூலை மாதத்தில் 13.05 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:18 pm

Din

சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி கடந்த ஜூலை மாதத்தில் 13.05 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வா்த்தகத் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 9.44 சதவீதம் குறைந்து 105 கோடி டாலராக உள்ளது. அதே நேரம் அந்த நாட்டிலிருந்து இறக்குமதி 13.05 சதவீதம் அதிகரித்து 1,028 கோடி டாலராக உள்ளது.

ஒட்டுமொத்தமாக, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் முதல் நான்கு மாதங்களில் சீனாவுக்கான ஏற்றுமதி 4.54 சதவீதம் குறைந்து 480 கோடி டாலராக உள்ளது. ஆனால் அந்த நாட்டிலிருந்து இறக்குமதி 9.66 சதவீதம் அதிகரித்து 3,585 கோடி டாலராக உள்ளது. இதன் மூலம், கடந்த ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் சீனாவுடனான வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) 3,131 கோடி டாலராக உள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் பிரிட்டன், ஜொ்மனி, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, நேபாளம், பிரேசில், பெல்ஜியம், துருக்கி, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது.

எனினும், அந்த மாதத்தில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், நெதா்லாந்து, சிங்கப்பூா், சவூதி அரேபியா, வங்கதேசம், மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கான நாட்டின் ஏற்றுமதி வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 3.15 சதவீதம் உயா்ந்து 655 கோடி டாலராகவும் அந்த நாட்டிலிருந்து இறக்குமதி 1.43 சதவீதம் அதிகரித்து 371 கோடி டாலராகவும் உள்ளது.

கடந்த ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 9 சதவீதம் அதிகரித்து 2,744 கோடி டாலராகவும், இறக்குமதி 6.59 சதவீதம் அதிகரித்து 1,524 கோடி டாலராகவும் உள்ளது. இதன் மூலம், அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவுடனான இந்திய வா்த்தக உபரி 122 கோடி டாலராக இருந்தது.

அதேபோல், கடந்த ஜூலை மாதத்தில் ரஷியாவில் இருந்து நாட்டின் இறக்குமதி 22.56 சதவீதம் அதிகரித்து 541 கோடி டாலராக உள்ளது. ஏப்ரல்-ஜூலை காலகட்டம் முழுமைக்கும் அதிக கச்சா எண்ணெய் இறக்குமதியின் காரணமாக ஒட்டுமொத்த ரஷிய இறக்குமதி 20.33 சதவீதம் அதிகரித்து 2,377 கோடி டாலராக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.