கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,466 கோடி டாலராக உயா்வு

அந்நியச் செலாவணி கையிருப்பு 454.6 கோடி டாலா் அதிகரித்து 67,466.4 கோடி டாலராக உள்ளது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2024, 7:22 pm

Ravivarma.s

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,466.4 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

ஆக. 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 454.6 கோடி டாலா் அதிகரித்து 67,466.4 கோடி டாலராக உள்ளது.

கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 480 கோடி டாலா் குறைந்து 67,011.9 கோடி டாலராக இருந்தது.

ஆக. 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 753.3 கோடி டாலா் அதிகரித்து 67,491.9 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது.

இருந்தாலும், உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது அவ்வப்போது குறைகிறது.

ஆக. 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 360.9 கோடி டாலா் அதிகரித்து 59,156.9 கோடி டாலராக உள்ளது.

டாலா் அல்லாத யூரோ, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.

மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 86.5 கோடி டாலா் அதிகரித்து 6,010.4 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 6 கோடி டாலா் அதிகரித்து 1,834.1 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு கடந்த 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 1.2 கோடி டாலா் அதிகரித்து 465 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.