
மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பதன் மூலமும், பணப்புழக்கத்தை மேம்படுத்த முடிவெடுத்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்த முடிந்தது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 56.74 புள்ளிகள் குறைந்து 81,709.12 புள்ளிகளாகவும், நிஃப்டி 35.85 புள்ளிகள் குறைந்து 24,672.55 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தை தொடர்ந்து 11-வது முறையாக பெஞ்ச்மார்க் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவிகிதமாக வைத்திருக்க முடிவு செய்தது.
இருப்பினும், வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை மேம்படுத்த, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரொக்க இருப்பு விகிதத்தை 4 சதவிகிதமாகக் குறைப்பதாக அறிவித்தார்.
இதையும் படிக்க: விலை உயரும் ஹூண்டாய் காா்கள்
நாணயக் கொள்கைக் குழு நிதியாண்டு 2025-க்கான அதன் பணவீக்க கணிப்பைத் திருத்தியுள்ள நிலையில், நுகர்வோர் விலைக் குறியீடு பணவீக்க கணிப்பு 4.8 சதகவிதமாக உயர்ந்தது.
துறை வாரியாக, ஐடி மற்றும் ஊடகம் தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்த நிலையில் ஆட்டோ, மெட்டல், எஃப்எம்சிஜி, டெலிகாம், பொதுத்துறை வங்கி பங்குகள் 0.3 முதல் 1 சதவிகிதம் வரை உயர்ந்து.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.3 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.6 சதவிகிதமும் உயர்ந்தன.
நிஃப்டியில் பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ லைஃப், டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்த நிலையில் அதானி போர்ட்ஸ், சிப்லா, பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.
டாடா மோட்டார்ஸ் (+3.21%), பஜாஜ் ஆட்டோ (+2.34%), மற்றும் ஆக்சிஸ் வங்கி (+1.50%) ஆகியவை பங்குகள் நிஃப்டியில் உயர்ந்தும், அதானி போர்ட்ஸ் (-1.51%), சிப்லா (-1.42%) மற்றும் பார்தி ஏர்டெல் (-1.09%) ஆகிய பங்குகள் சரிந்தும் முடிந்தது.
ஆனந்த் ரதி, சிட்டி யூனியன் வங்கி, கோபோர்ஜ், தீபக் பெர்டிலைசர்ஸ், இ-க்லெர்க்ஸ் சர்வீசஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இந்தியன் ஹோட்டல்ஸ், லாரஸ் லேப்ஸ், எம்சிஎக்ஸ் இந்தியா, மெட்பிளஸ் ஹெல்த், பேடிஎம், ஆரக்கிள் பைனான்சியல் சர்வீசஸ், பிபி ஃபின்டெக், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், பிரமல் எண்டர்பிரைசஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட சுமார் 230 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தைத் தொட்டன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சுமார் 0.05% அதிகரித்து ரூ.84.68 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.