
பங்குச் சந்தை இன்று சற்றே (டிச. 9) சரிவுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
கடந்த 2 வாரங்களாக உயர்ந்த பங்குச்சந்தை இன்று சற்றே சரிவுடன் தொடங்கியுள்ளது. மதியத்திற்கு மேல் புள்ளிகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,602.58 என்ற புள்ளிகளில் சரிவுடன் தொடங்கியது.
காலை 10.50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 81458.22 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 44 புள்ளிகள் சரிந்து 24,633.90 புள்ளிகளில் தொடங்கியது. காலை 10.50 மணி நிலவரப்படி நிஃப்டி 24,594.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, சன் பார்மா, டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்துள்ளன.
ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் விலை சற்றே குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.