மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் இறக்குமதி செய்ய இனி அனுமதி பெற வேண்டும்!

மடிக்கணினிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பொருட்களை இறக்குமதி செய்ய நிறுவனங்கள், இனி அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில், அதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 13 முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மடிக்கணினிகள்
மடிக்கணினிகள்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பொருட்களை இறக்குமதி செய்ய நிறுவனங்கள், இனி அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில், அதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 13 முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் குறித்த கவலைகளை தொழில்துறையினர் சுட்டிக்காட்டிய பிறகு, கடந்த ஆண்டு அக்டோபரில் அரசு இந்த பொருட்களின் இறக்குமதிக்கான வழங்கப்பட்ட எந்தவொரு அங்கீகாரமும் 2025 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என்று தெரிவித்தது. அதே வேளையில், இறக்குமதியாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க அனுமதியும் வழங்கியது.

இதையும் படிக்க: ஸ்விக்கி பங்கு 4 சதவிகிதத்திற்கும் மேலாக சரிவு!

அதே வேளையில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், 2025 ஆண்டிற்கான தடை செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அறிவிப்பை அறிவித்தது. முன்னதாக செப்டம்பரில், மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட சில தகவல் தொழில்நுட்ப பெருட்களை இறக்குமதி செய்வதற்கான தற்போதைய ஒப்புதல் முறையை, டிசம்பர் 31 வரை நீட்டித்தது.

முதலில் மடிக்கணி, டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், அல்ட்ரா-ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் மீதான இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 3, 2023ல் அறிவித்தது.

நவம்பர் 1, 2023 முதல் புதிய முறையை அமல்படுத்திய முதல் நாளில், கிட்டத்தட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகளை இறக்குமதி செய்ய அனுமதி கோரிய ஆப்பிள், டெல் மற்றும் லெனோவா உள்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது.

2021-22ஆம் ஆண்டில் இறக்குமதி சுமார் 7.37 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது, 2022-23ல் 5.33 பில்லியன் அமெரிக்க டாலர் மடிக்கணினிகளை இறக்குமதி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.