அதிக ஏற்ற இறக்கங்களுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

நிலையற்ற அமர்வில் இன்று, பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஓரளவு சரிந்து முடிவடைந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மும்பை: நிலையற்ற அமர்வில் இன்று, பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஓரளவு சரிந்து முடிவடைந்தது. நிஃப்டி 23,700 புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்ற நிலையில், ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு மற்றும் எஃப்எம்சிஜி ஆகிய துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்குவதில் கவனம் செலுத்தினர்.

இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 67.30 புள்ளிகள் சரிந்து 78,472.87 புள்ளிகளாகவும், நிஃப்டி 25.80 புள்ளிகள் சரிந்து 23,727.65 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

கலவையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில், இந்திய குறியீடுகள் ஏற்ற இறக்கங்களுடன் தொடங்கியது. இதில் ஆட்டோ, எனர்ஜி, எஃப்எம்சிஜி ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதால் நிஃப்டி குறியீடு சற்று உயர்ந்த நிலையில், லாப பதிவு தொடங்கியதால் சிறிய மாற்றத்துடன் முடிந்தது.

இதையும் படிக்க: 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ஹோண்டா எஸ்பி125 அறிமுகம்

பவர் கிரிட் கார்ப், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ், டைட்டன் மற்றும் எஸ்.பி.ஐ ஆகியவை நிஃப்டியில் சரிந்து முடிந்தது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், ஈச்சர் மோட்டார்ஸ், பிபிசிஎல் மற்றும் ஐடிசி ஆகியவை உயர்ந்து முடிந்தது.

துறை வாரியாக ஆட்டோ, எஃப்எம்சிஜி, எண்ணெய் & எரிவாயு ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் இன்று கொள்முதல் செய்த நிலையில், ஐடி, ஊடகம், உலோகம், பொதுத்துறை வங்கி ஆகிய பங்குகளை விற்பனை செய்தனர். பிஎஸ்இ மிட்கேப் குறியீடு ஏற்ற இறக்கங்களுடன் முடந்த நிலையில், ஸ்மால்கேப் குறியீடு 0.3 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.62 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 73.08 டாலராக உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை (டிசம்பர் 25) பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com