
முதலீட்டாளர்களிடையே நிலவிய நிலையற்ற தன்மையால் பங்குச் சந்தை பெரிய மாற்றங்களின்றி நிறைவு பெற்றது. சென்செக்ஸ் 0.39 புள்ளிகள் சரிந்து 78,472 புள்ளிகளுடனும் நிப்ஃடி 22 புள்ளிகள் உயர்ந்து 23,750 புள்ளிகளுடனும் நிறைவு பெற்றது.
ஆட்டோ, மீடியா பங்குகள் உயர்வுடனும், வங்கி மற்றும் நுகர்வோர் பொருள்கள் துறை சரிவுடன் முடிந்தன.
ஆண்டு இறுதியில் இருப்பதால், பங்குச் சந்தையில் எந்தவித மாற்றங்களும் நிகழ வாய்ப்பில்லை என்றும், இதேபோன்று சமநிலையில்தான் பங்குச் சந்தை இருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
13 நிறுவனப் பங்குகள் உயர்வு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 0.39 புள்ளிகள் சரிந்து 78,472.48 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.00050 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22.55 புள்ளிகள் உயர்ந்து 23,750.20 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.095 சதவீதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 13 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 17 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.
அதிகபட்சமாக அதானி போர்ட்ஸ் 5.23%, எம்&எம் 1.61%, மாருதி சுசூகி 1.49%, சன் பார்மா 1.23%, பார்தி ஏர்டெல் 0.99%, டாடா மோட்டார்ஸ் 0.64% உயர்ந்திருந்தன.
இதேபோன்று , ஏசியன் பெயின்ட்ஸ் -0.95%, டைட்டன் கம்பெனி -0.91%, நெஸ்ட்லே இந்தியா -0.78%, சொமேட்டோ -0.61%, ரிலையன்ஸ் -0.51%, எச்.டி.எஃப்.சி வங்கி -0.41%, டெக் மஹிந்திரா -0.37% சரிந்திருந்தது.
நிஃப்டி நிலவரம்
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22.55 புள்ளிகள் உயர்ந்து 23,750.20 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.095 சதவீதம் உயர்வாகும்.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் ஹிந்து காப்பர், ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ், பேஜ் இன்டஸ்ட்ரீஸ், வர்தமான் டெக்ஸ்டைல்ஸ், பாந்தன் வங்கி, மஸ்டெக் லிமிடெட், கில்லட் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்தன.
இன்டலெக்ட் டிசைன், காட்ஃபிரே பிலிப்ஸ், ஆம்பர் என்டர்பிரைசஸ், புளூ டார்ட் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
நடுத்தர நிறுவனங்கள் 0.12 சதவீதம் உயருடன் இருந்தன. சிறு, குறு நிறுவனங்கள் எந்தவித மாற்றமுமின்றி சமநிலையில் முடிந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.