இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை சரிந்து மீண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 268 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.4.08 லட்சம் கோடி உயர்ந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தையில் விலை குறைந்த நிலையில் பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு கிடைத்தது. ஐடி, ஃபார்மா, ஹெல்த்கேர் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டாலும், வர்த்தகத்தின் பிற்பகுதியில் தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிப் பங்குகள், நிதி நிறுவனங்கள், ஆட்டோ, ரியால்ட்டி, மீடியா, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. இதனால், சந்தை இரண்டாவது நாளாக நேர்மறையாக முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.4.08 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.384.86 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.376.32 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.273.94 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 519.94 புள்ளிகள் குறைந்து 71,035.25-இல் தொடங்கிய சென்செக்ஸ், 70,809.84 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 71,938.59 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 267.64 புள்ளிகள் (0.37 சதவீதம்) உயர்ந்து 71,822.83-இல் நிறைவடைந்தது.
20 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் எஸ்பிஐ, டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, மாருதி, என்டிபிசி, ஐடிசி உள்பட 20 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், டெக் மஹிந்திரா, சன்ஃபார்மா, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் உள்பட10 பங்குகள் மட்டும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 97 புள்ளிகள் முன்னேற்றம்:
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வர்த்தக இறுதியில் 96.80 புள்ளிகள் உயர்ந்து 21,840.05-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் 200 புள்ளிகள் குறைந்து 21,530.20 வரை சென்றது. நிஃப்டி பட்டியலில் 35 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

தொடரும் பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,205, நிஃப்டி 394.05 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை