மும்பை: மேற்கு ஆசியாவில் குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை பகுதியில் தீவிரமடைந்து வரும் பதற்றங்கள் விநியோகத் தடைகள் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தன.
இதன் விளைவாக, சென்செக்ஸ் குறியீடு 3 சதவீதத்திற்கும் மேல் சரிந்த நிலையில், சந்தையின் தொடர் வீழ்ச்சியால் கடந்த மூன்று நாட்களில் முதலீட்டாளர்கள் ரூ. 7.17 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,260.13 புள்ளிகள் சரிந்து 76,403.87 புள்ளிகளாக இருந்தன. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 999.79 புள்ளிகள் சரிந்து 76,664.21 புள்ளிகளாகவும், நிஃப்டி 275.10 புள்ளிகள் சரிந்து 23,897.95 புள்ளிகளாக நிலைபெற்றது.
இந்திய பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 3வது நாளாக சரிந்து, 1 சதவீதத்திற்கும் மேல் சென்று நிறைவடைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் மொத்தமாக 2,905 பங்குகள் சரிந்த நிலையில் 1,326 பங்குகள் உயர்ந்தன. இதில் 158 பங்குகள் மாற்றமின்றி வர்த்தகமானது.
நீண்டகாலமாக நீடிக்கும் மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடரும் இடையூறுகளுக்கு மத்தியில், அதிகரித்த அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் பிரதிபலிக்கும் வகையில், இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற-இறக்கமும் அதிகரித்தது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2027 நிதியாண்டிற்கான வருவாய் வளர்ச்சி கணிப்பு சந்தை எதிர்பார்ப்புகளை விடக் குறைவாக வந்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 7.09 சதவீதம் சரிந்தன.
சென்செக்ஸில் எச்.சி.எல். டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் ட்ரென்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்தன.
ஆசியச் சந்தைகளில், தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடும் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், வியாழக்கிழமையன்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 3,254.71 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 107.3 டாலராக 2.17 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது.
Summary
Equity benchmark indices Sensex and Nifty tumbled over 1 per cent on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!

கரடியின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,635.67, நிஃப்டி 488.20 புள்ளிகளுடன் நிறைவு!

தொடரும் பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,205, நிஃப்டி 394.05 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை



