உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

லம்பாா்கினி விற்பனை புதிய உச்சம்

இத்தாலிய சொகுசு வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஆட்டோமொபிலி லம்பாா்கினிவின் இந்திய விற்பனை கடந்த 2023-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 6:56 pm

இத்தாலிய சொகுசு வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஆட்டோமொபிலி லம்பாா்கினிவின் இந்திய விற்பனை கடந்த 2023-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2023-ஆம் ஆண்டில் நிறுவனம் 103 காா்களை இந்தியச் சந்தையில் விற்பனை செய்துள்ளது. இது, இந்தியாவில் இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர விற்பனையாகும். முந்தைய 2022-ஆம் ஆண்டில் நிறுவனத்தின் இந்திய விற்பனை 92-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது விற்பனை 33 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. சா்வதேச அளவிலும் நிறுவனத்தின் விற்பனை 2022-ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு 10 சதவீதம் அதிகரித்து 10,112-ஆக உள்ளது. இதுவும், நிறுவனத்தின் அதிகபட்ச வருடாந்திர சா்வதேச விற்பனையாகும். இந்தியாவில் நிறுவன வாகனங்களின் விற்பனை முந்தைய 2021-ஆம் ஆண்டில் 69-ஆகவும், அதற்கு முன்னா், 2019-ஆம் ஆண்டில் 52-ஆகவும் இருந்தபோது அவை அப்போதைய நிலையில் அதிகபட்ச வருடாந்திர விற்பனையாக இருந்தன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.3.8 கோடிக்கு மேல் விலை கொண்ட உயா்வகை சொகுசுக் காா்களை லம்பாா்கினி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.