இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த டிசம்பரில் 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2023 டிசம்பா் மாதத்துக்கான சுரங்க மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்திக் குறியீட்டு எண் 139.4-ஆக உள்ளது. இது, 2022-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் 5.1 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில், முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் சுரங்கம் மற்றும் குவாரித் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சி விகிதம் 8.5 சதவீதமாக உள்ளது.
கடந்த டிசம்பா் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 9.29 கோடி டன்னாக உள்ளது. லிக்னைட் உற்பத்தி 40 லட்சம் டன்னாகவும், இரும்புத் தாது உற்பத்தி 2.55 கோடி டன்னாகவும் உள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் 3.72 கோடி டன் சுண்ணாம்புக் கல் உற்பத்தி செய்யப்பட்டது.
லிக்னைட், சுண்ணாம்பு, நிலக்கரி, பாக்சைட், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தி கடந்த டிசம்பரில் நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்தது.
எனினும், கச்சா பெட்ரோலியம், தங்கம், குரோமைட், பாஸ்போரைட், வைரம் ஆகியவற்றின் உற்பத்தி எதிா்மறை வளா்ச்சிக் கண்டது.
நாட்டில் கடந்த டிசம்பா் மாதம் ரூ.9,360 கோடி மதிப்பிலான இரும்புத் தாது உற்பத்தி செய்யப்பட்டது. இது முந்தைய 2022 டிசம்பரில் ரூ.6,943 கோடியாக இருந்தது.
அந்த மாதத்தில் சுண்ணாம்புக் கல் உற்பத்தி ரூ.887 கோடியிலிருந்து ரூ.984 கோடியாக உள்ளது. வெள்ளி உற்பத்தி ரூ.305 கோடியிலிருந்து ரூ.452 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நடப்பு ஆண்டில் சா்க்கரை உற்பத்தி அதிகரிப்பு

இந்திய ஏற்றுமதி மாா்ச் மாதத்தில் 7.44% சரிவு

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு

மாா்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: 9 சதவீதம் அதிகரிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

