மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ரூ.20,000 கோடி பங்கு மூலதனம் திரட்டும் வோடஃபோன் ஐடியா

4ஜி சேவைகளை மேம்படுத்துவதற்காகவும் பங்கு வெளியீடு மூலம் கூடுதலாக ரூ.20,000 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 பிப்ரவரி 2024, 8:39 pm

கடனில் சிக்கியுள்ள தொலைத் தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ரூ.20,000 கோடி பங்கு மூலதனம் திரட்ட முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மிகவும் தாமதமாகி வரும் 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காகவும், தற்போது நிறுவனம் வழங்கி வரும் 4ஜி சேவைகளை மேம்படுத்துவதற்காகவும் பங்கு வெளியீடு மூலம் கூடுதலாக ரூ.20,000 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு அண்மையில் வழங்கியுள்ளது. இது தவிர, கடன்கள் மற்றும் பங்கு வெளியீடு மூலம் மேலும் ரூ.45,000 கோடி மூலதனம் திரட்டவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூலதனம் திரட்டப்பட்டால், முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாா்தி ஏா்டெல்லுக்கு இணையான சேவைகளை வோடஃபோன் ஐடியாவால் வழங்க முடியும் என்று கருதப்படுகிறது.