ஒரு நாள் சரிவுக்குப் பிறகு புதன்கிழமை பங்குச்சந்தை நேற்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 612 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.4.58 லட்சம் கோடி உயர்ந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் சந்தை சரிவுடன் தொடங்கினாலும், பின்னர் மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பையொட்டி உற்சாகம் பெறத் தொடங்கியது. அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. குறிப்பாக மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பு சந்தை வலுப்பெற உதவியாக இருந்தது என பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.4.58 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.379.78 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ. 1,970.52 லட்சம் கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,002.70 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 66.83 புள்ளிகள் குறைந்து 71,073.04-இல் தொடங்கிய சென்செக்ஸ், 70,846.04 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 71,851.39 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 612.21 புள்ளிகள் (0.86 சதவீதம்) உயர்ந்து 71,752.11-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,914 பங்குகளில் 2,455 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,373 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 86 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
28 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் சன்ஃபார்மா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, எஸ்பிஐ, எம் அண்ட் எம் உள்ளிட்ட 28 பங்குகள் விலை உயர்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம் எல் அண்ட் டி (4.22 சதவீதம்) மற்றும் டைட்டன் (1.03 சதவீதம்) ஆகிய இரண்டு மட்டும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
நிஃப்டி 204 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 34.85 புள்ளிகள் குறைந்து 21,487.25-இல் தொடங்கி 21,448.85 வரை கீழே சென்றது. பின்னர், 21,741.35 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 203.60 புள்ளிகள் (0.95 சதவீதம்) உயர்ந்து 21,725.70-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 46 பங்குகள்ஆதாயம் பெற்றன. 4 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


