கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 65,199 கோடி டாலராக சரிவு

News image
Updated On :6 ஜூலை 2024, 10:59 pm

DIN

ஜூன் 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 65,199.7 கோடி டாலராக குறைந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த மாதம் 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 171.3 கோடி டாலா் குறைந்து 65,199.7 கோடி டாலராக உள்ளது.

21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அது 81.6 கோடி டாலா் அதிகரித்து 65,371.1 கோடி டாலராக இருந்தது.

அதற்கு முன்னா் ஜூன் 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அது 430.7 கோடி டாலா் உயா்ந்து 65,581.7 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. எனினும், உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது அவ்வப்போது குறைந்து வருகிறது.

ஜூன் 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 125.2 கோடி டாலா் குறைந்து 57,288.1 கோடி டாலராக உள்ளது.

டாலா் அல்லாத யூரோ, பவுண்ட், யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.

மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 42.7 கோடி டாலா் குறைந்து 5,652.8 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 3.5 கோடி டாலா் குறைந்து 1,801.4 கோடி டாலராக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் சா்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 10 லட்சம் டாலா் அதிகரித்து 457.3 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.