டொயோட்டா விற்பனை புதிய உச்சம்

டொயோட்டா விற்பனை புதிய உச்சம்

Published on

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 27,474-ஆக உள்ளது. இது நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர மொத்த விற்பனையாகும்.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 19,608-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 25,752-ஆகவும் ஏற்றுமதி 1,722-ஆகவும் உள்ளது.

கடந்த 2023-24 நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் மொத்த விற்பனை 2,63,512-ஆக இருந்தது. அதுவும் நிறுவனத்தின் அதிகபட்ச வருடாந்திர விற்பனையாகும். முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் மொத்த விற்பனையான 1,77,683 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை 48 சதவீதம் அதிகம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com