தங்கம்
தங்கம்

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ,55 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை திடீரென பவுனுக்கு ரூ.720 உயா்ந்து ரூ.55,360-க்கு விற்பனையானது.
Published on

இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.54,640-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை தங்கம் விலை திடீரென உயா்ந்து பவுன் ரூ.55 ஆயிரத்தைக் கடந்தது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயா்ந்து ரூ.6,920-க்கும், பவுனுக்கு ரூ.720 உயா்ந்து ரூ.55,360-க்கும் விற்பனையானது.

இதற்கிடையே, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.100.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 உயா்ந்து ரூ. 1,00,500-க்கும் விற்பனையானது.

X
Dinamani
www.dinamani.com