சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 அதிரடியாக வியாழக்கிழமை குறைந்துள்ளது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ. 54,600-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு அதிரடியாக குறைந்து வருகின்றது.
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 குறைந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் ரூ.480 குறைந்து ஒரு சவரனின் விலை ரூ.51,920 ஆக விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் வியாழக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கும் ஒரு கிராமின் விலை ரூ.6,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் தங்கம் வெள்ளிக்கான இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டதால், கடந்த 3 நாள்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.3,160 குறைந்துள்ளது.
அதேபோல், கடந்த வாரம் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 100-ஐ எட்டிய நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு சரிவை கண்டுள்ளது.
திங்கள்கிழமை ஒரு கிராம் ரூ.96-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ரூ.3.50, புதன்கிழமை 50 பைசா குறைந்து ரூ.92-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஒரு கிராமுக்கு மேலும் ரூ. 3 குறைந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ ரூ. 89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

தங்கம் விலை இன்று(ஜூன் 1) குறைவு! எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை இன்று(மே 26) குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை இன்று (மே 19) உயர்வு! எவ்வளவு தெரியுமா?
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



