கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சென்செக்ஸ் 6000 புள்ளிகள் வீழ்ச்சி: ரூ.36 லட்சம் கோடி முதலீடு இழப்பு!

தேர்தல் நிலவரத்தில் நிச்சயமின்மை நிலவுவதால் சந்தை தொடர் சரிவு

News image
Updated On :4 ஜூன் 2024, 7:03 am

DIN

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருவதால் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளது.

பங்குகளின் விலை வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் ஏறத்தாழ ரூ.36.3 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளனர்.

திங்கள்கிழமை சந்தை முடிவில் ரூ,426 லட்சம் கோடியாக இருந்த பிஎஸ்இ நிறுவனங்களின் மூலதனம் செவ்வாய்க்கிழமை 11 மணியளவில் ரூ.400 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் இழப்பையும் நிப்டி 838 புள்ளிகள் இழப்பையும் சந்தித்தன.

11 மணியளவில் சென்செக்ஸ் 3,690 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 72,740 புள்ளிகளை தொட்டது. நிப்டி 1,144 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 22,119 புள்ளிகளை தொட்டது.

இந்நிலையில் பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 5,800 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. தொடர்சரிவால் சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் இழப்புக்குள்ளாகியுள்ளது. நிப்டி 21,600 ஆக குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.