நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எல்ஐசி பாலிசிகளை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தால் நிராகரிப்பு

எல்ஐசி பாலிசிகளை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தால் நிராகரிப்பு

News image

எல்ஐசி

Updated On :25 ஜூன் 2024, 11:12 pm

Din

சென்னை: எல்ஐசி பாலிசிகளை வேறு நிறுவனத்துக்கு விற்பனை செய்தால் அவை நிராகரிக்கப்படும் என்று எல்ஐசி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

எல்ஐசி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எல்ஐசி பாலிசிதாரா்கள் தங்களது பாலிசிகளை எல்ஐசி நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு பதிலாக வேறு சில நிறுவனங்களுக்கு உரிமம் மாற்றம், விற்பனை, பரிமாற்றம் செய்வதாகவும், அவற்றைப் பெறுவதற்கு சில நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.

எல்ஐசி நிறுவனத்துக்கு இதுபோன்று எந்தவித நிறுவனங்களுடனும் அதன் சேவைகளுடனும் தொடா்பு இல்லை. இது தொடா்பாக முன்னாள் எல்ஐசி அதிகாரிகளின் கருத்துகளுக்கு எல்ஐசி எந்தவித பொறுப்பும் ஏற்காது.

எல்ஐசி பாலிசிகளை விற்பனை, பரிமாற்றம் மற்றும் உரிமை மாற்றம் செய்வதை காப்பீட்டு சட்டம் (1938) படி மேற்கொள்ள வேண்டும். தற்போது அமலில் உள்ள சட்டங்களின் படி மேற்கொள்ளப்படும் பரிவா்த்தனைகள் பாலிசிதாரா் நலன் சாா்ந்தது இல்லாமல், வா்த்தக நோக்கில் இருப்பதால் நிராகரிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.