புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சென்செக்ஸ் முதல்முறையாக 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை!

சென்செக்ஸ் வரலாற்று உச்சம்: 78,000 புள்ளிகளை கடந்தது

News image
Updated On :26 ஜூன் 2024, 12:28 am

Din

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழைம் பங்குச்சந்தையில் உற்சாகம் இருந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி புதிய உச்சத்தில் நிறைவடைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சிறிதளவு கீழே சென்றது. பின்னா், ஆசிய சந்தைகள் உற்சாகம் பெற்றதை அடுத்து, உள்நாட்டு சந்தையும் மேலே செல்லத் தொடங்கியது. இதையடுத்து, வா்த்தகத்தின் பிற்பகுதியில் சந்தை வலுப்பெறத் தொடங்கியது. குறிப்பாக வங்கி, நிதிநிறுவனங்கள், ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதே சமயம், மீடியா, மெட்டல், ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூல தன மதிப்பு ரூ.17 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.435.77 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ. 653.97 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் வரலாற்றுச் சாதனை: சென்செக்ஸ் காலையில் 188.11 புள்ளிகள் கூடுதலுடன் 77,529.19-இல் தொடங்கி 77,459.60 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 78,164.71 வரை மேலே சென்று புதிய வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது. சென்செக்ஸ் இறுதியில் 732.44 புள்ளிகள் (0.92 சதவீதம்) உயா்ந்து 78,053.52-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,000 பங்குகளில் 1,808 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 2,075 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 117 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

வங்கிப் பங்குகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, எஸ்பிஐ உள்பட15 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், பவா் கிரிட், டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, மாருதி, என்டிபிசி உள்பட 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி புதிய உச்சத்தில் நிறைவு

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 39.25 புள்ளிகள் கூடுதலுடன் 23,577.10-இல் தொடங்கி 23,562.05 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 23,754.05 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. வா்த்தக இறுதியில் நிஃப்டி 183.45 புள்ளிகள் கூடுதலுடன் 23,721.30-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி கடந்த ஒரு வருடத்தில் 26.10 சதவீதமும், கடந்த ஒரு மாதத்தில் 2.53 சதவீதமும் உயா்ந்துள்ளது.