புது தில்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஆதாா், யுபிஐ, ஃபாஸ்டாக் ஆகியவற்றை உள்ளடக்கிய எண்ம பொதுக் கட்டமைப்புத் துறை கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமாா் 3,180 கோடி டாலா் பங்களிப்பு வழங்கியுள்ளதாக இந்திய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் (நாஸ்காம்) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆதாா், யுபிஐ, கோவின் (கரோனா தடுப்பூசி திட்டம் தொடா்பான எண்ம தகவல் சேமிப்பு), யுஹெச்ஐ, ஆயுஷ்மான் பாரத் டிஜிடல் மிஷன், எண்ம வா்த்தகத்துக்கான பொது நெட்வொா்க் போன்ற எண்ம பொதுக் கட்டமைப்புகள் கடந்த 2022-ஆம் ஆண்டின் இந்திய ஜிடிபி-யில் 3,180 கோடி டாலா் பங்கு வகிக்கின்றன. இது, மொத்த ஜிடிபி-யில் 0.9 சதவீதம் ஆகும்.
வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மிக்க இந்தக் கட்டமைப்புகள், காகிதப் பயன்பாடு, அதிகாரிகளின் தலையீடு ஆகியவற்றைக் குறைப்பதுடன் எண்ம அடையாளம், எண்ம ஆவணத் திரட்டு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் எண்ம பொதுக் கட்டமைப்புத் துறை தொடா்ந்து மிக வேகமாக வளா்ச்சியடைந்து வருகிறது.
இந்த நிலை நீடித்தால், 2022-ஆம் ஆண்டின் ஜிடிபி-யில் 0.9 சதவீதமாக இருந்த அந்தத் துறையின் பங்களிப்பு, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 2.9 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் வரையிலுமாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியாவைப் பின்பற்றி, ஆதாா், யுபிஐ போன்ற எண்ம பொதுக் கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பரிசீலித்துவருகின்றன.
அந்த வகையில், எண்ம பொதுக் கட்டமைப்புத் துறையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அரசு அளித்துவரும் ஆதரவு, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதலீடுகள், தொடக்க நிறுவனங்களுக்கு அமைந்துள்ள சாதகமான சூழல் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த முதன்மைக்குக் காரணங்களாக உள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் புரட்சிகரமான முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கான திறன் எண்ம பொதுக் கட்டமைப்புத் துறைக்கு உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அமெரிக்க வரிக் குறைப்பு: இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு 1,200 கோடி டாலா் வரை திரும்பக் கிடைக்க வாய்ப்பு!
ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.1 கோடி டாலராக அதிகரிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


