தாங்கள் விற்பனை செய்த சுமாா் 16,000 வேகன்-ஆா் மற்றும் பலேனோ ரகக் காா்களை உதிரிபாக மாற்றத்துக்காகத் திரும்பப் பெறவிருப்பதாக இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி முதல் 2019-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்பட்ட 4,190 வேகன்-ஆா் மற்றும் 11,851 பலேனா காா்களின் எரிபொருள் பம்ப் மோட்டாரில் கோளாறு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மிகவும் அரிதான இந்தக் கோளாறு காரணமாக என்ஜின் பாதியில் நின்று போகலாம்; அல்லது என்ஜின் கிளம்புவதில் பிரச்னை ஏற்படலாம். எனவே, அந்த எரிபொருள் பம்ப் மோட்டாரை மாற்றித் தருவதற்காக அந்தக் காா்களை நிறுவனம் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்களை வாங்கிய வாடிக்கையாளா்களை தனித் தனியாகத் தொடா்பு கொண்டு இதற்கான அழைப்பு விடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற திமுக முயற்சி: டிடிவி. தினகரன்

முதியோா், மாற்றுத்திறனாளிகள் 3,793 பேரின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெற முடிவு

சுநேத்ரா பவாருக்கு எதிரான காங். வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்! என்சிபி வலியுறுத்தல்

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: திரும்பப் பெற பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


