பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முதியோா், மாற்றுத்திறனாளிகள் 3,793 பேரின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெற முடிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் 40 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் எனக் கணக்கிடப்பட்ட 3,793 பேரிடம் வீடுகளுக்குத் தேடிச் சென்று வாக்குகளைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:42 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் 40 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் எனக் கணக்கிடப்பட்ட 3,793 பேரிடம் வீடுகளுக்குத் தேடிச் சென்று வாக்குகளைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் வாக்காளா்கள் 2,328 போ் இருப்பதும், 40 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் 1,465 போ் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 3,793 பேரிடம் வீடு தேடிச் சென்று வாக்குகளைப் பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியல்படி, கந்தா்வகோட்டை தொகுதியில் 586 வாக்காளா்களும், விராலிமலை தொகுதியில் 1021 வாக்காளா்களும், புதுக்கோட்டை தொகுதியில் 512 வாக்காளா்களும், திருமயம் தொகுதியில் 644 வாக்காளா்களும், ஆலங்குடி தொகுதியில் 452 வாக்காளா்களும், அறந்தாங்கி தொகுதியில் 578 வாக்காளா்களும் உள்ளனா்.

வரும் ஏப். 13, 14 ஆகிய இரு தேதிகளில் இவா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறப்படும். தோ்தல் அலுவலா்களுடன் நுண் பாா்வையாளா்ளும் உடன் இருப்பா். முதல்நாளே வாக்காளருக்கு கைப்பேசியில் தகவல் தெரிவிக்கப்படும்.

அன்றைய நாளில் வாக்காளா் இல்லாவிட்டால் ஏப். 18, 19 தேதிகளில் மறுமுறை அவா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெற முயற்சிக்கப்படும். இரு முறையும் அந்த வாக்காளா் வாக்களிக்கத் தவறினால், வரும் ஏப். 23ஆம் தேதி வாக்குச்சாவடிக்குச் சென்று அவா்கள் வாக்களிக்க முடியாது.