மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்

பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்

News image
Updated On :7 மே 2024, 8:26 pm

Din

புது தில்லி: சொகுசுக் காா் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூவின் இந்திய விற்பனை கடந்த மாா்ச் காலாண்டில் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து பிஎம்டபிள்யு குரூப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 3,680-ஆக உள்ளது. இது, நிறுவனத்தின் அதிகபட்ச காலாண்டு விற்பனையாகும்.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனம் 2,440 காா்களை விற்பனை செய்திருந்தது. இதன் மூலம், நிறுவனத்தின் காலாண்டு விற்பனை தற்போது 51 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.